ADDED : பிப் 20, 2024 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: அரசின் இலவச வீடு வழங்க வலியுறுத்தி, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பாலகொலா பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனு:
ஊட்டி பாலகொலா அருகே, 20 குடும்பத்தினர் வீடு இல்லாமல் உள்ளனர். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்துவரும் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூலி வேலை செய்துவரும் பகுதி மக்கள் நலன்கருதி, அரசு வழங்கிவரும் இலவச வீடு வழங்க ஆவன செய்யவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

