/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் அருகே கிராம சபை கூட்டத்தில் பட்டா வழங்க மனு
/
பந்தலுார் அருகே கிராம சபை கூட்டத்தில் பட்டா வழங்க மனு
பந்தலுார் அருகே கிராம சபை கூட்டத்தில் பட்டா வழங்க மனு
பந்தலுார் அருகே கிராம சபை கூட்டத்தில் பட்டா வழங்க மனு
ADDED : மார் 31, 2025 09:35 PM

பந்தலுார்,; பந்தலுார் அருகே அய்யன் கொல்லி அரசு பழங்குடியினர் பள்ளி வளாகத்தில், சேரங்கோடு ஊராட்சி கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி செயலாளர் ஷோனிஷாஜி வரவேற்றார்.
கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்து, 'தீன் தயாள் உபாத்தியாயா கிராமப்புற திறன் பயிற்சி திட்டம்; பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதாரம்; ஏழை எளிய மக்களின் நலிவுற்ற தன்மை மற்றும் வறுமையை குறைப்பதற்கு கிராம செழுமை முயற்சி திட்டம்,' ஆகியவற்றை செயல்படுத்துவது குறித்து விளக்கி பேசினார்.
மேலும், மழைநீர் சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சீரமைத்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளதால் அதனை சீரமைக்கவும், யானை தொல்லையை கட்டுப்படுத்தவும், பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு அரசு பட்டா வழங்கவும் பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி மனு அளித்தனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கேபிள் இணைப்பு வழங்குவதால், தமிழக அரசுக்கு இழப்பு ஏற்படுவதால், அதனை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
'பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில், பணி மேற்பார்வையாளர் ஷர்மிளா, சப்--இன்ஸ்பெக்டர் ராமசாமி, வனவர்கள் பெலிக்ஸ், முத்தமிழ், மின் பணியாளர் மணிகண்டன், ஊராட்சி முன்னாள் துணை தலைவர் சந்திரபோஸ், முன்னாள் கவுன்சிலர் கணபதி, மாங்கோடு ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி பணியாளர் ஷீலா நன்றி கூறினார்.