/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் வாட்டர் ஏ.டி.ஏம்., இயந்திரத்தை இடம் மாற்ற மனு
/
பந்தலுாரில் வாட்டர் ஏ.டி.ஏம்., இயந்திரத்தை இடம் மாற்ற மனு
பந்தலுாரில் வாட்டர் ஏ.டி.ஏம்., இயந்திரத்தை இடம் மாற்ற மனு
பந்தலுாரில் வாட்டர் ஏ.டி.ஏம்., இயந்திரத்தை இடம் மாற்ற மனு
ADDED : நவ 24, 2024 11:00 PM
பந்தலுார் ; 'பந்தலுார் பஜார் வாட்டர் ஏ.டி.எம்., இந்திரத்தை இடம் மாற்றி வைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் வியாபாரிகள் சங்க தலைவர் அஷ்ரப்; செயலாளர் ஆண்டனி இணைந்து நகராட்சி கமிஷனரிடம் வழங்கியுள்ள மனு:
பந்தலுார் பஜாரில் வணிக வளாகம் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறாக வாட்டர் ஏ.டி.எம்., வைக்கப்பட்டு உள்ளது. இதனை இடமாற்றி வைக்க மாவட்ட கலெக்டரிடம், மனு அளிக்கப்பட்டது.
அப்போது, 'உடனடியாக நகராட்சி நிர்வாகம், இதனை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாற்றி வைக்க வேண்டும்,' என, கலெக்டர் நகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். ஆனால், தற்போது வரை நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரத்தை, 15 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யா விட்டால் வியாபாரிகள் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.