/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புவிசார் குறியீடு பெற்ற 'தோடர் எம்ப்ராய்டரி' வெளி நபர் தயாரிப்பை தடுக்க எஸ்.பி.,யிடம் மனு
/
புவிசார் குறியீடு பெற்ற 'தோடர் எம்ப்ராய்டரி' வெளி நபர் தயாரிப்பை தடுக்க எஸ்.பி.,யிடம் மனு
புவிசார் குறியீடு பெற்ற 'தோடர் எம்ப்ராய்டரி' வெளி நபர் தயாரிப்பை தடுக்க எஸ்.பி.,யிடம் மனு
புவிசார் குறியீடு பெற்ற 'தோடர் எம்ப்ராய்டரி' வெளி நபர் தயாரிப்பை தடுக்க எஸ்.பி.,யிடம் மனு
ADDED : அக் 07, 2025 12:16 AM

ஊட்டி;'புவிசார் குறியீடு பெற்ற தோடர் பழங்குடியினரின் எம்ராய்டரி பின்னலாடை பொருட்களை வெளி ஆட்கள் தயாரித்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்,'என, தோடர் சமுதாய மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரியில் வாழும் தோடர் பழங்குடியின மக்கள் எருமைகள் வளர்ப்பு மற்றும் 'எம்ப்ராய்டரி' பின்னலாடை தயாரிப்பான 'பூத்துக்குளி' எனப்படும் போர்வை, ஸ்வெட்டர், மப்ளர் உள்ளிட்ட பல்வேறு பின்னலாடை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.
இவர்களது எம்பிராய்டரி படைப்புகள் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவில், தனித்துவத்துடன் உள்ளதால், 2008ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், தோடர் பழங்குடியின பெண்கள் தங்களது பின்னலாடை களை தயாரித்து, விற்பனை செய்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக இதனை தோடர் அல்லாதவர்கள் தயாரித்து விற்பனை செய்வதால், இவர்களுக்கான வருமானம் குறைந்து வருகிறது. இதில் உள்ள குளறுபடிகளை களைய இவர்கள் நேற்று எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.
தோடர் சமுதாய துணைத்தலைவர் ஸ்ரீகாந்த் நிருபர்களிடம் கூறுகை யில்,'' ஊட்டியை சேர்ந்த ஷீலா என்பவர் பழங்குடியினர் அல்லாத நுாற்றுக்கணக்கான வெளி ஆட்களை வைத்து தோடரின மக்கள் தயாரிக்கும் 'எம்பிராய்டரி' கைவினை பொருட்களை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார். 'புவிசார் குறியீடு பெற்ற பின்னலாடைகளை தொடரின மக்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும்,' என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளது. இதனால், தோடர் மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இன்று (நேற்று) மாவட்ட எஸ்.பி.,யை சந்தித்து மனு அளித்துள்ளோம். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.