/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் விழாவில் பிரச்னை ஏற்படுத்த முயற்சி: இந்து முன்னணி கலெக்டரிடம் மனு

ADDED : பிப் 20, 2024 11:11 PM
ஊட்டி:எருமாடு கோவில் விழாவில் பிரச்னையை துாண்ட முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்துமுன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
பந்தலுார் எருமாடு பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும் நடைபெறும் சிவன் ராத்திரி விழாவில், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர்.
கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் நிலப்பிரச்னை தொடர்பாக, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. அப்போதைய கலெக்டர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டதை அடுத்து, இதுநாள் வரை எவ்வித பிரச்சினையும் இல்லாமல், வருவாய்த்துறை அனுமதியுடன் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'அங்குள்ள கிராம சாவடி நிலத்தில் கடந்த மாதம் சமத்துவ பொங்கல் விழா நடத்த வேண்டும்,' என, சிலர் கூறினர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால், ஏமாற்றம் அடைந்த அந்த நபர்கள், 'சிவன் ராத்திரி விழாவை நடத்த விடமாட்டோம்,' என, தெரிவித்துள்ளனர்.
இதனால் விழாவில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, வேலுச்சாமி கூறி உள்ளார்.