/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி நில பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டரிடம் மனு
/
அரசு பள்ளி நில பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டரிடம் மனு
அரசு பள்ளி நில பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டரிடம் மனு
அரசு பள்ளி நில பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டரிடம் மனு
ADDED : டிச 17, 2024 09:35 PM

பந்தலுார்; 'பந்தலுார் அருகே எருமாடு மராடி அரசு நடுநிலைப்பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே எருமாடு மராடி அரசு நடுநிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்பினா மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கூடலுார் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மராடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனை வருவாய் துறை அதிகாரிகள், ஐந்து முறை நில அளவை செய்து, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பகுதியை எல்லைகளாக காட்டி உள்ளனர். நில அளவை செய்ய வரும் அதிகாரிகள் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை ஆக்கிரமிப்பு பகுதிக்கு செல்ல அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.
பள்ளிக்குரிய, 31 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள நிலையில், வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக நில உட்பிரிவு செய்து கொடுத்துள்ளனர். கடந்த,30 ஆண்டு காலமாக பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வந்த கழிப்பறையை, ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வசப்படுத்தி வேலி அமைத்துள்ளதால், மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பள்ளி மேலாண்மை குழு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பள்ளி நிலத்தை மீட்டுத் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.