/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தர கோரி கலெக்டரிடம் மனு
/
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தர கோரி கலெக்டரிடம் மனு
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தர கோரி கலெக்டரிடம் மனு
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தர கோரி கலெக்டரிடம் மனு
ADDED : டிச 10, 2024 11:22 PM

ஊட்டி; 'பொது இடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர வேண்டும்,' என, வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மஞ்சூர் அருகே கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட முள்ளிமலை கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கிராமத்தின் பொது மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி, கிராம மக்கள் சார்பில் குந்தா வருவாய் துறைக்கு புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இந்நிலையில், ஊர் தலைவர் தலைமையில் பெண்கள் உட்பட கிராம மக்கள் நேற்று , கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து ஆக்கிரமிப்பு பிரச்னை தொடர்பாக மனு அளித்தனர்.
'மனு குறித்து குந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என , கலெக்டர் உத்தரவிட்டார். ஊர் தலைவர் போஜன் கூறுகையில், ''ஊர் பொது மைதானத்தை சுரேஷ் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். குந்தா வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்,'' என்றார்.