/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பாறு' கழுகுகளை பாதுகாக்க மருந்தாளர்கள் ஒத்துழைப்பு அவசியம்
/
'பாறு' கழுகுகளை பாதுகாக்க மருந்தாளர்கள் ஒத்துழைப்பு அவசியம்
'பாறு' கழுகுகளை பாதுகாக்க மருந்தாளர்கள் ஒத்துழைப்பு அவசியம்
'பாறு' கழுகுகளை பாதுகாக்க மருந்தாளர்கள் ஒத்துழைப்பு அவசியம்
ADDED : மார் 17, 2024 01:35 AM

கூடலூர்;நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், வனத்துறை சார்பில் பாறு கழுகுகள் பாதுகாப்பு குறித்து மருந்தாளர்கள் மற்றும் மருந்து வினியோகஸ்தர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
மசினகுடி வன கோட்டம் துணை இயக்குனர் அருண்குமார் தலைமை வகித்து பேசுகையில், '''பாறு' கழுகுகள் இறந்ததை உண்டு வனத்தை சுத்தம் செய்து, வன சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது, இவை அழிவின் விளிம்பில் உள்ளது.
இதற்கு, இறந்த வளர்ப்பு கால்நடைகள் அவைகள் உணவாக உட்கொள்வதன் மூலம், அவைகளுக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்ட, சில மருந்துகள், இவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதே காரணம்.
இவைகளை பாதுகாக்க, கால்நடைகளுக்கு வலி நிவாரணியாக பயன்படுத்த சில மருந்துகளை அரசு தடை விதித்துள்ளது. இதன் விற்பனையை தவிர்க்க வேண்டும். இதற்கு மருந்தாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு அவசியம்.'' என்றார்.
'பாறு கழுகுகளை பாதுகாப்பது முக்கியத்துவம், அழிவுக்கான காரணங்கள்; அரசு கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை செய்துள்ள வலி நிவாரணி மருந்துகள்' குறித்து, அருளகம் அறக்கட்டளை செயலாளர் பாரதிதாசன், கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர்கள் பார்த்தசாரதி, மருந்து ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் விளக்கினர்.
தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்வதில்லை என, மருந்தாளர்கள், வினியோகஸ்தர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
முகாமில் வனச்சரகர்கள் பாலாஜி, ஜான் பீட்டர், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ். மருந்தாளர்கள், வினியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.

