/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தலைமை ஆசிரியரை தாக்கிய புகார்; உடற்கல்வி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
/
தலைமை ஆசிரியரை தாக்கிய புகார்; உடற்கல்வி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
தலைமை ஆசிரியரை தாக்கிய புகார்; உடற்கல்வி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
தலைமை ஆசிரியரை தாக்கிய புகார்; உடற்கல்வி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 27, 2024 09:06 PM

கூடலுார்; கூடலுார், குங்கூர்மூலா அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய புகாரில், உடற்கல்வி ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கூடலுார், குங்கூர்மூலா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா (பொ). இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அசீமா என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சமீப காலமாக அசீமா பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, கடந்த, 8ம் தேதி அவரிடம் கேட்டபோது, அசீமா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார். பிரச்னை தொடர்பாக, பள்ளி மேலாண்மை குழு சார்பில் கல்வி துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார், உடற்கல்வி ஆசிரியர் அசீமாவை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.