/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடுதல் வகுப்பறைகள் கட்டி தர கோரி மறியல்; கல்லட்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ADDED : நவ 12, 2024 06:08 AM

ஊட்டி; ஊட்டி அருகே உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட சோலாடா ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்லட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றன.
இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. போதிய வகுப்பறைகள் இல்லாததால் ஒரு வகுப்பறையில் மூன்று வகுப்புகளை சார்ந்த மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.
இதையடுத்து, கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக் கோரி நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை புதிய கட்டடம் கட்டிக் கொடுக்க எந்தவித நடவடிக்கும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பள்ளிக்கான கூடுதல் கட்டடங்களை கட்டித்தர கோரி நேற்று காலை, 9:00 மணி முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் தங்களது பெற்றோருடன் கல்லட்டி சந்திப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த, ஊட்டிஆர்.டி.ஓ., சதீஷ் மற்றும் கல்வி துறை அலுவலர்கள் வந்து பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், 'பள்ளிக்கான புதிய கட்டடம் கட்டித்தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலைந்து சென்றனர்.
மறியல் போராட்டத்தால் கல்லட்டி சாலையில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.