/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா மையங்களில் 'பிளாஸ்டிக்' குவியல் :கால் நடைகளுக்கு ஆபத்து
/
சுற்றுலா மையங்களில் 'பிளாஸ்டிக்' குவியல் :கால் நடைகளுக்கு ஆபத்து
சுற்றுலா மையங்களில் 'பிளாஸ்டிக்' குவியல் :கால் நடைகளுக்கு ஆபத்து
சுற்றுலா மையங்களில் 'பிளாஸ்டிக்' குவியல் :கால் நடைகளுக்கு ஆபத்து
ADDED : ஜன 30, 2024 10:42 PM

ஊட்டி;ஊட்டி அருகே சூட்டிங் மட்டம் உட்பட பிற சுற்றுலா மைய பகுதிகளில் உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைஅதிகரித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் முக்கியமான, 9 சோதனை சாவடிகள் உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதுவாக 'பிளாஸ்டிக்' பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் சோதனை சாவடிகளில் பணியமர்த்தப்பட்டு, சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள்; பைகளை வாங்கி, துணி பைகளை வழங்கி வந்தனர்.
இதனால், பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டது. சமீப காலமாக, பணியில் தொய்வு ஏற்பட்டதால், சுற்றுலா வருபவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.
குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் சூட்டிங் மட்டம், பைக்காரா பகுதியில், உணவுடன் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை, வனப்பகுதி உட்பட புல் தரையில் வீசுகின்றனர். குப்பை தொட்டிகளில் தேங்கியுள்ள குப்பை அகற்றப்படாமல் உள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன், கால்நடைகள் சிதறி கிடக்கும் குப்பைகளை உண்ணுவதால், அவைகளுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கடந்த காலங்களை போல, எல்லைகளில் பிளாஸ்டிக் சோதனையை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.