/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குவித்து வைக்கப்படும் குப்பை: சுகாதாரம் பாதிப்பு
/
குவித்து வைக்கப்படும் குப்பை: சுகாதாரம் பாதிப்பு
ADDED : மார் 05, 2024 12:29 AM

பந்தலுார்:பந்தலுார் சேரம்பாடி பகுதிகளில் குவித்து வைக்கப்படும் குப்பையால் சுகாதாரம் கேள்விக் குறியாக உள்ளது.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சேகரிக்கப்படும் குப்பைகள் குழிவயல் குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் பல்வேறு இடங்களிலும் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. அதில், கொளப்பள்ளி பஜார் நுழைவாயில் பகுதியில், சாலை ஓரத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு கழிவுகள் நிறைந்துள்ளதால், கடும் துர்நாற்றம் வீசி, சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் குடியிருப்புகள் கடைகள் நிறைந்துள்ள இது போன்ற இடங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

