/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைலட்களுக்கு ஹெலிகாப்டரில் பயிற்சி
/
பைலட்களுக்கு ஹெலிகாப்டரில் பயிற்சி
ADDED : டிச 16, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் மலைப்பகுதிகளில், அவ்வப்போது, கோவை சூலுார் விமானப்படையின் ஹெலிகாப்டரில் பைலட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கோவை சூலுார் விமானப்படையில் இருந்து வந்த 'எம்.ஐ.,17' ரக ஹெலிகாப்டரில் பைலட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில், ஹெலிகாப்டரை தரையில் இருந்து உயர்த்தி செல்லும் பயிற்சி, அந்தரத்தில் சிறிது நேரம் நிலை நிறுத்துவது, உயரத்தில் பறந்து தரையிறக்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பலமுறை வானில் வட்டமடித்த ஹெலிகாப்டரை பார்த்து, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

