ADDED : ஆக 19, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: மன உளைச்சல் காரணமாக முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டி பட்பயர் பகுதியை சேர்ந்தவர் அஜீஸ்,67, ஊட்டியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்ட அஜீஸ், வேலைக்கு செல்ல ஆர்வம் இல்லாமல் இருந்தார்.
இந்நிலையில், ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே பழைய போஸ்ட் ஆபிஸ் பகுதியில், இரும்பு கம்பி வேலியில் துாக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி ஜி 1 போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.
