/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறுமிளகு பறிக்க பைபர் ஏணி தொழிலாளர்கள் நிம்மதி
/
குறுமிளகு பறிக்க பைபர் ஏணி தொழிலாளர்கள் நிம்மதி
ADDED : மார் 13, 2024 10:05 PM

கூடலுார் : கூடலுார் பகுதியில் குறுமிளகு பறிக்கும் பணிக்கு பைபர் மூலம் செய்யப்பட்ட ஏணிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில், தேயிலை, காபி தோட்டங்களில் உள்ள உள்ள மரங்களில், ஊடுபயிராக குறுமிளகு விளைவிக்கப்படுகிறது. தற்போது குறுமிளகு பறிக்கும் பணி நடந்து வருகிறது.
தொழிலாளர்கள் மூங்கில் அல்லது இரும்பில் செய்யப்பட்ட ஏணியை பயன்படுத்தி மரங்களில் ஏறி, செடிகளில் உள்ள குறுமிளகு பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடை அதிகம் கொண்ட ஏணிகளை பயன்படுத்தி குறுமிளகு பறிப்பதில் பல்வேறு சிரமங்களை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், எடை குறைவு மற்றும் பாதுகாப்பான பைபர் ஏணிகள், பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
விவசாய தொழிலாளர்கள் கூறுகையில், 'மரங்களில் ஏறி, செடிகளில் குறுமிளகு பறிக்க பயன்படுத்தி வரும் மூங்கில் மற்றும் இரும்பு ஏணி எடை அதிகம். தவறி கிழே விழுந்தால் பாதிப்பும் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள பைபர் மூலம் செய்யப்பட்ட ஏணிகள் பாதுகாப்பானது,' என்றனர்.

