/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 14, 2024 12:39 AM
ஊட்டி;ஊட்டியில் வரும், 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும், 16ம் தேதி, ஊட்டி பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில், 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்கின்றனர். 'எட்டாம் வகுப்பு முதல், பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., தொழில்கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டிரைவர்கள், தையல் கற்றவர்கள்,' என, அனைத்துவித தகுதியானவர்கள் முகாமில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். முகாமில், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, ஆர்வம் உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை, நேரிலோ, அல்லது 0423--2444004, 72000-19666 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

