/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகராட்சி பூங்காவை விரைவில் பொலிவுப்படுத்த திட்டம்; தினமலர் செய்தி எதிரொலி
/
நகராட்சி பூங்காவை விரைவில் பொலிவுப்படுத்த திட்டம்; தினமலர் செய்தி எதிரொலி
நகராட்சி பூங்காவை விரைவில் பொலிவுப்படுத்த திட்டம்; தினமலர் செய்தி எதிரொலி
நகராட்சி பூங்காவை விரைவில் பொலிவுப்படுத்த திட்டம்; தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஜூலை 07, 2025 10:32 PM

பந்தலுார்; பந்தலுார் பஜார் பகுதியில் புதர் சூழ்ந்து காணப்பட்ட, நகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பந்தலூர் பஜார் மற்றும் மேல்நிலைப்பள்ளி மைதானத்தை ஒட்டி நெல்லியாளம் சார்பில், 91லட்சம் ரூபாய் செலவில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால், பூங்காவிற்கு செல்ல சாலை வசதி இல்லாதது உடன், பூங்கா பணிகள் நிறைவு பெறாமல் புதர் சூழ்ந்து காணப்பட்டது. எனினும் பள்ளி குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பூங்காவிற்கு அவ்வப்போது சென்று தங்கள் ஓய்வு நேரத்தை செலவிட்டு வந்தனர்.
புதர் சூழ்ந்த இந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகளவில் இருந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில்செய்தி வெளியிடப்பட்டது.
அதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், புதர்கள் வெட்டி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூங்காவில் இந்த பகுதியில் செயல்படும் ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளின் கழிவுகள் நிறைந்து காணப்படுவதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2.41 லட்சம் ரூபாய் செலவில் கழிவுகள் வெளியேற்ற கால்வாய் வசதி மற்றும், பஜாரின் இரண்டு பக்கங்களிலும் நடை பாதைகள் அமைக்க பணி மேற்கொள்ள உத்தரவு கோரப்பட்டு உள்ளது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' சீரமைப்புக்கான நிதி கிடைத்தவுடன் நகராட்சி பூங்கா முழுமையாக சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்ப்படுத்த ஏதுவாகவும், பந்தலூர் பஜாரில் பாதசாரிகள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதைகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.