/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அருங்காட்சியகம் அமைக்க திட்டம்
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அருங்காட்சியகம் அமைக்க திட்டம்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அருங்காட்சியகம் அமைக்க திட்டம்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அருங்காட்சியகம் அமைக்க திட்டம்
ADDED : ஏப் 11, 2025 09:59 PM

ஊட்டி, ; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரியின் பாரம்பரியம் குறித்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. பூங்கா வளாகத்தில் கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், இத்தாலியன் கார்டன், கள்ளிச் செடி கண்ணாடி மாளிகை உள்ளது.
தவிர, ஆண்டு தோறும் ஏப்., மே மாதங்களில் கோடை விழா, செப்., அக்., மாதங்களில் இரண்டாவது சீசன் சமயங்களில், 270 ரகங்களில் பல லட்சம் மலர்கள் சுற்றுலா பயணியர் பார்வைக்கு காட்சிப்படுத்துகின்றனர். ஆண்டுக்கு 35 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.
இங்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஆங்கிலேயர் காலத்து பழமையான பாரம்பரிய கட்டடத்தில், தாவரவியல் பூங்கா குறித்து சிறப்பு அம்சங்கள்; பழங்குடிகள் உள்ளிட்ட நீலகிரியின் சிறப்பம்சங்கள் குறித்து அருங்காட்சியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. இதனால், கோடை விழாவின் போது, இந்த காட்சியகம் வரவேற்பை பெற வாய்ப்புள்ளது.

