/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அம்மன் வனத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
/
அம்மன் வனத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
ADDED : மார் 13, 2024 10:18 PM

கருமத்தம்பட்டி : மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.பாப்பம்பட்டியில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து அம்மன் வனம் உருவாக்கப்பட்டது.
மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது எம்.பாப்பம்பட்டி கிராமம். இங்குள்ள அறநிலையத் துறைக்கு சொந்தமான, எட்டு ஏக்கர் நிலத்தில், பேரூராட்சி, எல்.எம்.டபிள்யூ., நிறுவனம், அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் அம்மன் வனம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.எட்டு ஏக்கர் நிலம் சமன்படுத்தப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டன. 500 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்து அம்மன் வனத்தை உருவாக்கினர்.
இதில், பேரூராட்சி தலைவர் சசிக்குமார், எல்.எம்.டபிள்யூ., நிறுவன அதிகாரி கணேஷ்குமார், சென்னியாண்டவர் கோவில் செயல் அலுவலர் தன்ராஜ், கே.எம்.சி.எச்., மருத்துவமனை டாக்டர் சீதாராமன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

