/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்ட அதிபர்கள் சங்கம் தலைவர், துணை தலைவர் தேர்வு
/
தோட்ட அதிபர்கள் சங்கம் தலைவர், துணை தலைவர் தேர்வு
ADDED : செப் 22, 2024 11:39 PM

குன்னுார் : தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (உபாசி) தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குன்னுார், தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (உபாசி) 131 வது மாநாட்டின் நிறைவாக, ஆண்டு பொது கூட்டம் நடந்தது. அதில், கண்ணன் தேவன் ஹில்ஸ் பிளாண்டேஷன் நிர்வாக இயக்குனர் மேத்யூ ஆபிரகாம், 2024--25ம் ஆண்டிற்கான உபாசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 'டாடா காபி லிமிடெட் மற்றும் அமல்கமடேட் பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' குழுவின் இயக்குனராகவும் உள்ளார்.
இதே போல, கர்நாடகாவின் சிக்கமகளூரு, 'அல்துார் குட்டடமனே, கெரேஹக்லு' தோட்ட உரிமையாளர் அஜோய் திப்பையா துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், கர்நாடகா தோட்ட சங்கத்தில் (கே.பி.ஏ.,) தலைவராகவும், செயற்குழு உறுப்பினராகவும் நீண்ட காலம் இருந்தார். காபி கமிட்டியின் தலைவராக பணியாற்றினார்.