/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொட்டும் மழையிலும் பசுந்தேயிலை பறிக்கும் தோட்ட தொழிலாளர்கள்
/
கொட்டும் மழையிலும் பசுந்தேயிலை பறிக்கும் தோட்ட தொழிலாளர்கள்
கொட்டும் மழையிலும் பசுந்தேயிலை பறிக்கும் தோட்ட தொழிலாளர்கள்
கொட்டும் மழையிலும் பசுந்தேயிலை பறிக்கும் தோட்ட தொழிலாளர்கள்
ADDED : மே 19, 2025 08:42 PM

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டும் மழையிலும், பிளாஸ்டிக் போர்வையுடன் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது.
தற்போது, 18 ரூபாய் முதல், 22 ரூபாய் வரை ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு விலை கிடைத்து வருகிறது. இந்த விலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை என்றாலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் ஓரளவு ஆறுதலாக உள்ளது.
இந்நிலையில், தயாராகி வரும் பசுந்தேயிலையை தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் தொடர் மழை காரணமாக, அறுவடை செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. அறுவடை செய்யாமல் விடும் பட்சத்தில், தரமான பசுந்தேயிலை முதிர்ந்து, கரட்டு இலையாக மாறி, தரம் குறைந்து விடுகிறது. இதனால், தொடர் மழையிலும் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் தோட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.