/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
19 வகை குறுமிளகு நாற்றுக்கள்; சோதனை முறையில் நடவு
/
19 வகை குறுமிளகு நாற்றுக்கள்; சோதனை முறையில் நடவு
ADDED : ஜன 12, 2024 11:29 PM
கூடலுார்;கூடலுார், பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் தேயிலை, காபி, குறுமிளகு, பாக்கு, 'பட்டர் புரூட்ஸ்' நாற்று உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப் படுகிறது.
பல வகையான குறு மிளகு வகைகள் இருந்தாலும், இங்கு பண்ணியூர் உள்ளிட்ட ஒரு சில வகை குறுமிளகு நாற்றுகளை மட்டுமே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்
இந்நிலையில், பல்வேறு வகை குறுமிளகு நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக, 19 வகையான குறுமிளகு சிறிய செடிகளை பல பகுதிகளிலிருந்து சேகரிக்கின்றனர்.
தொடர்ந்து, நவீன தொழில் நுட்பத்தில் நாற்றுகளை வளர செய்து, அதிலிருந்து புதிய வகை நாற்றுகளை உற்பத்தி செய்து, ஊடுபயிராக நடவு செய்து வளர்ச்சியை கண்காணித்து வருகின்றனர். இந்த முயற்சியை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'புதிதாக, 19 வகையான குறுமிளகு செடிகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.
இதற்காக, குறுமிளகு செடிகளை உற்பத்தி செய்து, பண்ணையில் நடவு செய்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.