/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்காவில் 'ஆலிவ்' மர நாற்று நடவு மருத்துவ பயன்பாட்டுக்கு ஏற்பாடு
/
பூங்காவில் 'ஆலிவ்' மர நாற்று நடவு மருத்துவ பயன்பாட்டுக்கு ஏற்பாடு
பூங்காவில் 'ஆலிவ்' மர நாற்று நடவு மருத்துவ பயன்பாட்டுக்கு ஏற்பாடு
பூங்காவில் 'ஆலிவ்' மர நாற்று நடவு மருத்துவ பயன்பாட்டுக்கு ஏற்பாடு
ADDED : டிச 01, 2025 04:49 AM

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில், முதல் முறையாக மருத்துவ குணம் கொண்ட ஆலிவ் மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில், அரக்கேரியா, ருத்ராட்சை, சீமை பனை, மக்னோலியா, பைன், டர்பன்டைன், பெரணி உட்பட, 285 வகையான மரங்கள் உள்ளன. பெரும்பாலும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை, 85 தாவர குடும்பங்களுக்கு உட்பட்ட, 255 வகைகள் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களும் உள்ளன.
இங்கு, முதன் முறையாக ஆலிவ் மர நாற்றுகள் நடவு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவ பயன்பாடு பூங்கா மேலாளர் லட்சு மணன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்த ஆலிவ் மரம்நல்ல நிலையில் வளர்கிறது. 'ஆலிவா யூரோபே' தாவரவியல் பெயர் கொண்ட 'ஒலியேசியே' குடும்பத்தை சேர்ந்த ஆலிவ் மரம் பழத்திலிருந்து ஆயில் பிரித்தெடுக்கப்படுகிறது.
80 சதவீதம் ஆயில் உற்பத்தி, 20 சதவீதம் பழ மாகவும் உண்ணவும் பயன் படுத்தப்படுகிறது. ஆசிய கண்டத்தை தாயகமாக கொண்ட ஆலிவ் மரங்கள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து , அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் அதிகம் பயிரிடப்பட்டு ஆயில் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் பண்டைய கால மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ், மருத்துவம் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் பயன்பாட்டிற்கு இதனை பரிந்துரைத்து திரவத் தங்கம் எளவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சிறப்பு பெற்ற ஆலிவ் மரங்கள் அதிகளவில் வளர்த்து மருத்துவ பயன்பாட்டிற்காக வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, என்றார்.

