/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகளில் 'பிளாஸ்டிக்' ஆய்வு; ரூ.26 ஆயிரம் அபராதம்
/
கடைகளில் 'பிளாஸ்டிக்' ஆய்வு; ரூ.26 ஆயிரம் அபராதம்
ADDED : பிப் 20, 2025 09:57 PM
கோத்தகிரி, ; கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் ஆய்வு நடத்தப்பட்டு, 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் தடை உத்தரவை மீறி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு புழக்கத்தில் உள்ளது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, கோத்தகிரி பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உட்பட ஊழியர்கள், 20க்கும் மேற்பட்ட கடைகளில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 26, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சுற்றுலா வாகனங்கள் உட்பட உள்ளூர் வாகனங்களில் ஆய்வு செய்ததில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், டிரைவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.