/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்தில் வீசப்படும் பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்பு
/
வனத்தில் வீசப்படும் பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்பு
வனத்தில் வீசப்படும் பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்பு
வனத்தில் வீசப்படும் பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்பு
ADDED : ஜன 17, 2026 06:04 AM
கூடலுார். ஜன. 17- -: தமிழக- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே, சாலையோரம் வீசிப்படும் 'பிளாஸ்டிக்' கழிவுகளால் வனச்சூழல் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுலா பயணிகள் எடுத்து வருவதை தடுக்க, மாவட்ட எல்லையில் சோதனை மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் பணி நடந்து வருகிறது. வருகின்றனர். எனினும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தமிழக- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வழியாக, நீலகிரிக்கு வரும் வாகனங்கள், நாடுகாணியில் சோதனை செய்யப்படுகின்றன. எனினும், எல்லையில் உள்ள, கீழ்நாடுகாணி முதல் நாடுகாணி வரை, 6 கி.மீ., துாரம் எந்த வாகன சோதனையும் செய்யப்படுவதில்லை.
இதனால், கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகள், தட்டுகள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை கீழ்நாடுகாணி அருகே, சாலையோர வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால், வன சூழலுக்கும், உணவு தேடி வரும் சிறு வன உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, இதனை தடுக்க கீழ்நாடுகாணி பகுதியில் வனப்பகுதியில் வீசி சென்றுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

