/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக்' கழிவு சேகரிப்பு: ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
/
'பிளாஸ்டிக்' கழிவு சேகரிப்பு: ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
'பிளாஸ்டிக்' கழிவு சேகரிப்பு: ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
'பிளாஸ்டிக்' கழிவு சேகரிப்பு: ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 26, 2025 11:00 PM
ஊட்டி, ; ஊட்டியில் 'பிளாஸ்டிக்' கழிவு சேகரிப்பு குறித்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி சேரிங்கிராஸ் பகுதியை அடைந்தது. அதில், ஊட்டி அரசு கலைக்கல்லுாரி, சி.எஸ்.ஐ.,- சி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித இருதய ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவது,' என, பதாகைகள் ஏந்தி, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதில், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மைதிலி,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற ஒருங்கிணைப்பாளர் சுவாதி மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.