sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 கால்வாயில் கொட்டப்படும் 'பிளாஸ்டிக்' கழிவுகள்; சுற்றுச்சூழல், மண்வளத்துக்கு பெரும் பாதிப்பு

/

 கால்வாயில் கொட்டப்படும் 'பிளாஸ்டிக்' கழிவுகள்; சுற்றுச்சூழல், மண்வளத்துக்கு பெரும் பாதிப்பு

 கால்வாயில் கொட்டப்படும் 'பிளாஸ்டிக்' கழிவுகள்; சுற்றுச்சூழல், மண்வளத்துக்கு பெரும் பாதிப்பு

 கால்வாயில் கொட்டப்படும் 'பிளாஸ்டிக்' கழிவுகள்; சுற்றுச்சூழல், மண்வளத்துக்கு பெரும் பாதிப்பு


ADDED : பிப் 26, 2026 05:45 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் நந்தட்டி கோழிக்கோடு சாலையோரம் மழைநீர் கால்வாயில் கொட்டப்படும், 'பிளாஸ்டிக்' கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரசு துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பல இடங்களிலிருந்தும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

மாவட்ட எல்லைகளில், நீலகிரிக்கு வரும் வாகனங்களை சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், நந்தட்டி அருகே, கோழிக்கோடு சாலையோரம் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

பருவமழையின் போது, மழை நீரில் அடித்து செல்லப்படும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் வனச்சுழலுக்கும், மண்வளத்திற்கும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இருந்தாலும், சுற்றுலா பயணிகள் பலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்து பயன்படுத்தி திறந்தவெளிகளில் வீசி செல்கின்றனர். இதனால், சுற்றுச்சூழலுக்கும் மண் வளத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

அரசு துறையினர் இவற்றை கண்டறிந்து அகற்றுவதுடன், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us