/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இதமான காலநிலை; குதுாகலத்தில் சுற்றுலா பயணிகள்
/
ஊட்டியில் இதமான காலநிலை; குதுாகலத்தில் சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் இதமான காலநிலை; குதுாகலத்தில் சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் இதமான காலநிலை; குதுாகலத்தில் சுற்றுலா பயணிகள்
ADDED : மே 20, 2025 10:38 PM
ஊட்டி; ஊட்டியில் மலர்கண்காட்சி நடந்து வரும் நிலையில் நேற்று கனமழை இல்லாத காரணத்தால், இதமான காலநிலை நிலவி, சுற்றுலா பயணிகள் குதுாலம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா துவங்கி நடந்து வரும் நிலையில், 15ம் தேதி, அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை, மாநில முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பூங்காவில், 275 ரகங்களில், பல லட்சம் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.
கடந்த ஐந்து நாட்களாக, பகல் நேரத்தில் கனமழை பெய்து வந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தவாறு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உருவங்களை கண்டு களித்தனர். இந்நிலையில், நேற்று, காலை முதல் மாலை வரை சிறிது நேரம் சாரல் மழை பெய்தபோதும், கனமழை பெய்யவில்லை. இதனால், இதமான காலநிலை நிலவியதை அடுத்து, சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். சிறுவர்கள், தாவரவியல் பூங்காவில் பசுமையான புல் தரையில் விளையாடி மகிழ்ந்தனர்.
தாவரவியல் பூங்காவை அடுத்து, ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா சிகரம் மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட மையங்களிலும், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நகரின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டபோது, போக்குவரத்து போலீசார் உடனுக்குடன் நெரிசலை சீர்படுத்தினர்.