ADDED : ஜன 31, 2026 05:26 AM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் நேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஆண்டுதோறும் காந்தி நினைவு தினமான, ஜன., 30 ல் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. இதனையொட்டி, குன்னுார் தீயணைப்பு நிலையத்தில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தலைமை வகித்த சிறப்பு நிலைய அலுவலர் சுப்ரமணி உறுதி மொழியை வாசிக்க, தீயணைப்பு வீரர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இதேபோல, ஊட்டி அரசுத்துறை அலுவலகங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
