/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெல் ஆராய்ச்சி மைய வயலில் உழவு பணி துவக்கம்; கை கொடுக்கும் பருவ மழையால் மகிழ்ச்சி

ADDED : ஜூலை 04, 2025 09:33 PM

கூடலுார்; கூடலுார் புளியம்பாறையில் செயல்பட்டு வரும், கோவை வேளாண் பல்கலைக்கழக வீரிய ஒட்டு நெல் ஆராய்ச்சி மையத்தில், விதை நெல் விதைப்பதற்கான உழவு பணி துவக்கப்பட்டுள்ளது.
கூடலுார் பகுதியில் வழக்கத்தை விட முன்னதாக பருவமழை துவங்கி பெய்து வருகிறது. நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.
பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், விவசாயிகள், நெல் விவசாயம் பணிகளை துவங்க, தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், புளியம்பாறையில் உள்ள கோவை வேளாண் பல்கலைக்கழக, வீரிய ஒட்டுநெல் ஆராய்ச்சிமையத்தில், விதை நெல் பயிரிடுவதற்கான வயல்களில், டிராக்டரில் உழவு பணிகளை துவங்கி உள்ளனர். உழவுப் பணிகள் முடிந்தபின், கோவை வேளாண் பல்கலைக்கழக புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள நெல் வகைகள்; விதை நெல் வழங்குவதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழக கண்டுபிடிப்பான கோ--50 உள்ளிட்ட விதை நெல் ஆகியவற்றை பயிரிட உள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'இந்த ஆராய்ச்சி மையத்தில், புதிய நெல் உருவாக்குவது தொடர்பான பயிர் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டுக்கு முன்னதாகவே பருவமழை துவங்கியதால், குறித்த நேரத்தில் நெல் விவசாய உழவு பணிகள் துவக்கப்பட்டது,' என்றனர்.