/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விடுதி அறையில் துாக்கிட்டு பிளஸ்--1 மாணவி தற்கொலை
/
விடுதி அறையில் துாக்கிட்டு பிளஸ்--1 மாணவி தற்கொலை
விடுதி அறையில் துாக்கிட்டு பிளஸ்--1 மாணவி தற்கொலை
விடுதி அறையில் துாக்கிட்டு பிளஸ்--1 மாணவி தற்கொலை
ADDED : ஜன 24, 2026 05:02 AM

பாலக்காடு: பாலக்காடு அருகே, பிளஸ்-1 மாணவி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் வரோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் - - ஸ்ரீஜா தம்பதியினரின் மகள் ருத்ரா, 16. இவர், கல்லேக்காடு அருகே வியாச வித்யா பீடம் என்ற தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்நிலையில், இரவு, 9:00 மணிக்கு, விடுதி அறையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலக்காடு டவுன் மேற்கு போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலந்து நாட்டில் உள்ள, ருத்ராவின் தந்தை ராஜேஷ் வெளியிட்ட வீடியோவில், ராக்கிங் குறித்து ருத்ரா விடுதி காப்பாளரிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, ருத்ராவின் குடும்பத்தினர் முதல்வருக்கும், போலீசாருக்கும் புகார் அளித்துள்ளனர். விடுதியில் உயிரிழந்த மாணவியோ அல்லது அவரது குடும்பத்தினரோ இதுவரை ஒரு புகார் கூட அளிக்கவில்லை என, பள்ளியின் முதல்வர் செந்தாமராட்சன் தெரிவித்துள்ளார்.

