/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மவுண்டன் ஹோம் பள்ளியில் பிளஸ்-2 பிரிவுபசார விழா
/
மவுண்டன் ஹோம் பள்ளியில் பிளஸ்-2 பிரிவுபசார விழா
ADDED : பிப் 04, 2026 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் மவுண்டன் ஹோம் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரியில் ஐ.எஸ்.சி., பிளஸ்---2 மாணவர்கள் வெளியேறும் பிரிவுபசார விழா பட்டமளிப்பு விழாவாக நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் பட்டதாரி உடைகள் அணிந்து வந்து மேடைகளில் நின்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போதகர் பென் இம்மானுவேல், பள்ளி முதல்வர் குவென்டின் டைரான் போப் ஆகியோர் நினைவு சின்னங்கள் வழங்கி பாராட்டி பேசினர். 1911ம் ஆண்டு முதல் கடந்த, 115 ஆண்டுகளாக பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் உயர் தரநிலைகள் குறித்து நினைவு கூறப்பட்டது. அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

