/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் பிளஸ் 2 தேர்வு: ஊட்டியில் கலெக்டர் ஆய்வு
/
நீலகிரியில் பிளஸ் 2 தேர்வு: ஊட்டியில் கலெக்டர் ஆய்வு
நீலகிரியில் பிளஸ் 2 தேர்வு: ஊட்டியில் கலெக்டர் ஆய்வு
நீலகிரியில் பிளஸ் 2 தேர்வு: ஊட்டியில் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 01, 2024 09:58 PM

ஊட்டி;ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் நடைபெறும் பிளஸ் 2 தேர்வு மையத்தை கலெக்டர் அருணா ஆய்வு செய்தார்.
நீலகிரியில், 41 மையங்களில், 6,158 மாணவ மாணவியர் மேல்நிலை இரண்டாம் ஆண்டு; 6475 முதலாம் ஆண்டு தேர்வு எழுதுகின்றனர். தவிர, 59 மையங்களில், 6,974 மாணவ மாணவியர் இடைநிலை தேர்வு எழுதுகின்றனர்.
தனித் தேர்வர்கள், 4 மையங்களில் மேல்நிலை முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் இடைநிலை கல்வி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
மேல்நிலை தேர்வு பணியில், 531 ஆசிரியர்கள், இடைநிலை தேர்வு பணியில், 859 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 138 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில், போதிய கழிப்பறை, குடிநீர் வசதிகளுடன், மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களை சென்றடைய, தேவையான போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மையங்களில் காற்றோட்டம், வெளிச்சத்துடன் கூடிய தேர்வறைகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, தரைத் தளத்திலேயே தேர்வறைகள் ஒதுக்கப்பட்டு, சொல்லி எழுதுபவர், மொழிப்பாட விலக்கு, தேர்வு எழுத கூடுதலாக, ஒரு மணி நேரம் ஆகிய சலுகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தேர்வறையில் அனுமதிக்காத துண்டுத்தாள், மொபைல் போன் வைத்திருப்பது, வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் செய்வது, ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், அதனால் மாணவர்களுக்கு எதிர்கால பாதிப்புகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அருணா, ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில், பிளஸ்-2 தேர்வு மையத்தை ஆய்வு செய்தார்.

