ADDED : ஜன 09, 2026 06:37 AM

அ நிறம் | அளவு
பாலக்காடு: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப், 42. இவர், 2023ல் 14 வயது சிறுவனை இயற்கைக்கு மாறான பாலியல் சித்திரவதை செய்தார்.
சிறுவனின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில், கல்லடிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் லத்தீபை கைது செய்தனர்.
குற்றபத்திரிக்கை சமர்ப்பித்த இவ்வழக்கில், பட்டாம்பி போக்சோ நீதிமன்றத்தில் வாதங்கள் கேட்டறிந்த நீதிபதி தினேஷ் பிள்ளை, குற்றவாளிக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சந்தீப் ஆஜரானார்.
