/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொக்காபுரம் கோவில் திருவிழா பரண்கள் அமைத்து கண்காணிப்பு
/
பொக்காபுரம் கோவில் திருவிழா பரண்கள் அமைத்து கண்காணிப்பு
பொக்காபுரம் கோவில் திருவிழா பரண்கள் அமைத்து கண்காணிப்பு
பொக்காபுரம் கோவில் திருவிழா பரண்கள் அமைத்து கண்காணிப்பு
ADDED : பிப் 17, 2024 01:08 AM

கூடலுார்;மசினகுடி பொக்காபுரம் திருவிழாவில், கோவில் வளாகத்திற்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க பரண் அமைத்து கண்காணிப்பு பணி நடக்கிறது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகே, பொக்காபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில், 5 நாள் திருவிழா நேற்று துவங்கியது.
திருவிழாவில் அம்மனை தரிசிக்க, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
பக்தர்கள் பாதுகாப்புக்காக, போலீசார் சார்பில் தனி 'கண்ட்ரோல்' அறை அமைத்து பாதுகாப்பு பணி நடந்து வருகிறது. கூடலுார், ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
கோவிலில் இருந்து கூடலுாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கும் பணியை, நேற்று மாலை, போக்குவரத்து கிளை மேலாளர் அருள்கண்ணன் துவக்கி வைத்தார்.
கோவில் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் வனவிலங்குகள் கோவில் வளாகத்தில் நுழைவதை தடுக்க, கோவில் அருகே மூன்று இடங்களில் பரண்அமைத்து, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கோவிலின் முக்கிய நிகழ்வான தேர் ஊர்வலம், 19ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடக்கிறது.அதிகாரிகள் கூறுகையில், 'கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக போலீசார், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வளாகத்துக்கு வன விலங்குகள் குறிப்பாக யானைகள் நுழைவதை தடுக்க, 3 பரண்கள் அமைத்து வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,'என்றனர்.