/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காருக்கு தீ வைத்த சம்பவம் போலீசார் விசாரணை
/
காருக்கு தீ வைத்த சம்பவம் போலீசார் விசாரணை
ADDED : ஜன 14, 2024 10:59 PM
கோத்தகிரி;கோத்தகிரி அருகே நிறுத்தி வைத்த காருக்கு, இரவில் தீ வைத்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி கெராடாமட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். மரம் அறுக்கும் தொழில் செய்து வருகிறார். இரவு சாலையோரத்தில் தனது காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் கார் புகையுடன் எரிவதை கண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த மோகன்தாஸ் மற்றும் சிலர், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும், கார் சேதம் அடைந்தது. இது குறித்து மோகன்தாஸ் கொடுத்த புகாரின்படி, சோலூர்மட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.