ADDED : செப் 13, 2026 06:32 PM
கோத்தகிரி: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, கோத்தகிரியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, ஹிந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பூஜிக்கப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.
விழா நாட்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, மாவட்ட எஸ்.பி., பிருந்தா உத்தரவுப்படி, கோத்தகிரியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் துவங்கிய கொடி அணி வகுப்பை ஏ.டி.எஸ்.பி.கள் சவுந்தர்ராஜன், மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். குன்னூர் டி.எஸ்.பி., ரவி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் விஜயசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் சதுக்கத்தில் துவங்கிய அணிவகுப்பு, முக்கிய சாலைகள் வழியாக, காவல் நிலையத்தை அடைந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
