/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீஸ் உடற்பயிற்சி கூடம் நவீன முறையில் புதுப்பிப்பு
/
போலீஸ் உடற்பயிற்சி கூடம் நவீன முறையில் புதுப்பிப்பு
போலீஸ் உடற்பயிற்சி கூடம் நவீன முறையில் புதுப்பிப்பு
போலீஸ் உடற்பயிற்சி கூடம் நவீன முறையில் புதுப்பிப்பு
ADDED : பிப் 13, 2025 09:11 PM

ஊட்டி,; ஊட்டியில் போலீஸ் உடற்பயிற்சி கூடம் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், எஸ்.ஐ., களாக பணியில் சேருபவர்கள் உடல் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியில் அமர்த்த படுகின்றனர்.
பயிற்சி காலத்திற்குப் பிறகு காவல் பணிக்கு செல்லும் போது போதிய உடற்பயிற்சிகள் இல்லாதது, துாக்கமின்மை குறித்த நேரத்தில் சாப்பிட முடியாதது போன்ற காரணங்களால் அவர்களின் உடல் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் போலீசாரின் பணி திறனும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க போலீசருக்காக தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் இருந்த பழைய உடற்பயிற்சி கூடம், 3 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.,நிஷா பங்கேற்று உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து உபகரணங்களை பார்வையிட்டார்.
இந்த மையத்தில் 'லெக் பிரஸ், அப்டமன் கிங், வெயிட் லிப்டிங் ராடுகள்' உள்ளிட்ட, 16 வகையான உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண் போலீசார் உடற் பயிற்சி பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.