நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டி பொறியியல் கல்லுாரி மாணவர் மாயமானதால் போலீசார் தேடி வருகின்றனர்.
ஊட்டி அருகே எமரால்டு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பேலிதளா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ், இவரது மகன் கவுசிக், 21, கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
செமஸ்டர் தேர்வுகளை முடித்து விட்டு கடந்த டிச., மாதம் பேலிதளா கிராமத்திற்கு வந்தார். கடந்த, 15ம் தேதி பொங்கல் தினத்தன்று கவுசிக் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பெற்றோர் எமரால்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து, எஸ்.ஐ., சவுந்தரராஜன் தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.

