/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தட்சிணாமூர்த்தி மடம் - சேவா சங்கம் இடையே 'பனிப்போர்' விசாரணைக்கு போலீஸ் உத்தரவு

ADDED : அக் 17, 2024 10:10 PM

ஊட்டி : ஊட்டி காந்தள் தட்சிணாமூர்த்தி மடத்தில், ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலய சேவா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் மடத்தின் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி அருகே காந்தள் தட்சிணாமூர்த்தி மடத்தின் ஆதீனமாக பேரூர் மருதாசல அடிகளார் உள்ளார். நேற்று காலை பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது, கோவில் வளாகத்தில் ஆங்காங்கே பூட்டு போடப்பட்டிருந்தது.
அதிருப்தியடைந்த பக்தர்கள் அங்கிருந்த மடத்தின் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, டவுன் டி.எஸ்.பி., யசோதா, இன்ஸ்பெக்டர் சிவசங்கரி ஆகியோர் வந்தனர்.
மடத்தின் ஒரு நிர்வாகியான சிவபிரகாஷ் அடிகளார், ஆலய சேவா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் குருக்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பினரும், கோவில் நிர்வாக பணிகள் குறித்து மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
பின், சிவபிரகாஷ் அடிகளாரிடம் போலீசார் சாவியை வாங்கி, கோவிலில் போடப்பட்ட பூட்டை திறந்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, கோவிலின் சில சாவிகளை போலீசார் வாங்கி, தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து சென்றனர்.
போலீசார் கூறுகையில்,'இங்குள்ள பிரச்னைகள் தொடர்பாக, கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் வந்த பின், ஆர்.டி.ஓ., முன்னிலையில் விரிவான விசாரணை நடத்தப்படும். அதுவரை கோவில் வழக்கம் போல் செயல்படும்,' என்றனர்.