/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு; வாகனங்கள் நுழைய தடை
/
கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு; வாகனங்கள் நுழைய தடை
கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு; வாகனங்கள் நுழைய தடை
கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு; வாகனங்கள் நுழைய தடை
ADDED : மார் 20, 2024 09:47 PM

ஊட்டி : ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 100 மீட்டர் வரை போலீசார் டிவைடர் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.
நீலகிரி லோக்சபாவில், 6 தொகுதிகள் உள்ளன. அதில், '6 லட்சத்து 83 ஆயிரத்து 21 ஆண் வாக்காளர்கள்; 7 லட்சத்து 35 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்கள்; 97 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம், 14 லட்சத்து 18 ஆயிரத்து 914 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின், வேட்புமனு தாக்கல் நேற்று முதல் துவங்கியது. 27ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நுாற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து, 100 மீ., துாரத்தில் இரண்டு இடங்களில் டிவைடர் அமைத்து போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வெளி வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நுழைவு வாயிலில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கலெக்டர் அலுவலகம் வருபவர்களை தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கின்றனர்.

