தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/777 மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

777 மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

777 மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்


ADDED : மார் 03, 2024 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:நீலகிரியில், 777 மையங்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

நீலகிரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தீவிர சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. குன்னுார் சாமண்ணா பூங்காவில் முகாமை கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். கோத்தகிரி அல்லிமாயார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில். நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று, போலியோ சொட்டுமருந்து வழங்கினர்.

மாவட்டத்தில், 'அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள்,' என, மொத்தம், 777 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தவிர, எல்லையோர சோதனை சாவடிகள், பணிநிமித்தமாக இடப்பெயர்ந்த மக்கள் வசிக்கும் இடங்களில் சிறப்பு மைக்கப்பட்டு குழந்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ''நீலகிரியில், 5 வயதுக்கு உட்பட்ட, 59 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us