/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் பொங்கல் விழா அம்மன் திருவீதி உலா
/
ஊட்டியில் பொங்கல் விழா அம்மன் திருவீதி உலா
ADDED : ஜன 18, 2024 01:59 AM

ஊட்டி : ஊட்டி மாரியம்மன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவை ஒட்டி, அம்மனின் திருவீதி உலா நடந்தது.
ஊட்டி பிரிசித்திபெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் தை திருநாளான கடந்த, 14ம் தேதி தொடங்கி, பொங்கல் விழா சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன்படி, பொங்கல் விழாவான நேற்று முன்தினம் அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
கோவிலில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மனின் திருவீதி உலா நடந்தது. கோவிலில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிப்பட்டனர்.