/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
நீலகிரியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நீலகிரியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நீலகிரியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 14, 2024 11:49 PM

ஊட்டி:நீலகிரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்தில், போலீசார் -- பொதுமக்கள் இடையே, நல்லுறவு ஏற்படும் வகையில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், காவல்துறை சார்பில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி., சுந்தரவடிவேல் முன்னிலையில், கலெக்டர் அருணா பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டர் அருணா மற்றும் எஸ்.பி., சுந்தரவடிவேல் ஆகியோர், குடும்பத்துடன் உறியடி போட்டியில் பங்கேற்றனர்.
போலீசார்- பொதுமக்கள் பங்கேற்ற கயிறு இழுக்கும் போட்டி, 100 மீட்டர் ஆண்கள் ஓட்டப்பந்தயம் போட்டி நடந்தது. கண் கவர் கலை நிகழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்தது.
இதில், ஏ.டி.எஸ்.பி., சவுந்திரராஜன், டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் உட்பட, அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில், கோலமிட்டு பொங்கலிட்டு பண்டிகை கொண்டாடப்பட்டது. தயார் செய்த பொங்கல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், மேலாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூடலூர், ஓவேலி பேரூராட்சி சார்பில், பேரூராட்சி அலுவலகத்தில், புகையில்லா போகிப் பண்டிகை, பொங்கல் விழா, நேற்று முன்தினம், நடந்தது. பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, புதுப்பானையில் பொங்கலிட்டு, விழாவை துவக்கி வைத்து, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மரக்கன்றுகள் நடவு செய்தனர். மன்ற உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. தலைமை எழுத்தர் கோட்டைசாமி, துணை தலைவர் சகாதேவன் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
குன்னூர் லிட்டில் சிஸ்டர் முதியோர் இல்லத்தில், ஏராளமான முதியவர்கள் உள்ளனர். நேற்று பழைய இனிமையான நினைவுகளுடன் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கவுன்சிலர் மன்சூர் தலைமையில், வார்டு மக்கள் கோலமிட்டு, பொங்கல் வைத்து ஆடி, பாடி மகிழ்ந்தனர். கவுன்சிலர் சுசீலா, தி.மு.க., நிர்வாகிகள் முருகேஷ், லியாகத் அலி, லிட்டில் சிஸ்டர் இல்ல அருட்சகோதரிகள் உட்பட பலர் பங்கேற்று ஜாதி மத பேதமின்றி கொண்டாடினர்.
பந்தலூர் அருகே முக்கட்டி அரசு பழங்குடியினர் நடுநிலை பள்ளியில், சேவ் நீலகிரி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பொங்கல் விழா கோலப் போட்டிகள் நடத்தப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் உன்னிகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோலப்போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர் முருகன், அறக்கட்டளை நிர்வாகிகள் பிருந்தா, சந்தியா, விஸ்வாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.