/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்றின் குரல்கள் அமைப்பின் பொங்கல் விழா சிறப்பு
/
குன்றின் குரல்கள் அமைப்பின் பொங்கல் விழா சிறப்பு
ADDED : ஜன 16, 2025 10:43 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் குன்றின் குரல்கள் அமைப்பு சார்பில், 11ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது.
திரைப்பட பின்னணி பாடகர் சித்தன் ஜெயமூர்த்தி தலைமையில், இசை நிகழ்ச்சியுடன், பொங்கல் வைத்து விழா துங்கியது. இதில், அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரியபண்டிகை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவ, மாணவியரின், பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய் கால் குதிரை ஆட்டம், கோலாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், சாட்டை குச்சி ஆட்டம் உட்பட நாட்டுப்புற நடனம் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.
மேலும், குழந்தைகளின் கல்வி மற்றும் பண்பாட்டு கலை இலக்கிய திறனை ஊக்குவிக்கும் வகையில், இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து, ஏராளமான மக்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.