/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 1.85 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு: டோக்கன் வினியோகம் துவக்கம்
/
நீலகிரியில் 1.85 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு: டோக்கன் வினியோகம் துவக்கம்
நீலகிரியில் 1.85 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு: டோக்கன் வினியோகம் துவக்கம்
நீலகிரியில் 1.85 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு: டோக்கன் வினியோகம் துவக்கம்
ADDED : ஜன 08, 2024 12:08 AM
ஊட்டி;நீலகிரியில், 1. 85 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுடன் பணம் வழங்கப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று முதல் தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
டோக்கன் வழங்கும் பணி
பொங்கல் பரிசு தொகை பெறும்போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நேற்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதேபோல் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு ஊட்டி என்.சி.எம்.எஸ். வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில்,
நீலகிரியில் 2 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டு பயனாளிகள் உள்ளனர். இதில் பொங்கல் பரிசுடன் பணம் வழங்க 1.85 லட்சம் பேர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருள்இல்லா அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் கிடையாது. ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்படும்.
இதுவரை கரும்பு 60 சதவீதம் வந்துள்ளது. கரும்பு கொள்முதல் மற்றும் வினியோகம் முழுவதும் கூட்டுறவுத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. புகார்களை தெரிவிக்க 1967, 1800-425-5901, 0423-2441216 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.