ADDED : ஏப் 17, 2026 09:02 PM

அ நிறம் | அளவு
ஊட்டி: நீலகிரியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் நேற்று தபால் ஓட்டு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தமாக படிவங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கும் தபால் ஓட்டு பதிவு, நேற்று காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணிவரை ஓட்டளிக்கப்பட்டது.
ஊட்டி தொகுதியில், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும்; கூடலுார் (தனி) தொகுதியில், தாமஸ் மேல்நிலைப்பள்ளியிலும்; குன்னுார் தொகுதியில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் படிவம்-டி சமர்ப்பித்து தபால் ஓட்டு போட்டனர்.
இதே போல, 85 வயது நிரம்பிய மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அந்தந்த இடங்களில் ஓட்டு அளித்தனர்.
