sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கடந்த இரண்டு ஆண்டுகளில் உருளைகிழங்கு ஏற்றுமதி 41,000 மெட்ரிக் டன்! மவுசு இருப்பதால் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை

/

கடந்த இரண்டு ஆண்டுகளில் உருளைகிழங்கு ஏற்றுமதி 41,000 மெட்ரிக் டன்! மவுசு இருப்பதால் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் உருளைகிழங்கு ஏற்றுமதி 41,000 மெட்ரிக் டன்! மவுசு இருப்பதால் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் உருளைகிழங்கு ஏற்றுமதி 41,000 மெட்ரிக் டன்! மவுசு இருப்பதால் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை


ADDED : ஆக 31, 2025 08:23 PM

Google News

ADDED : ஆக 31, 2025 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரியில் உருளை கிழங்கிற்கு வெளி நாடுகளில் மவுசு கூடுவதால், சாகுபடியை அதிகரிக்க தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீலகிரியின் தட்பவெப்ப நிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. இங்கு தேயிலை, காய்கறிகள், பழங்கள், நறுமண பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலை தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

அதில், ஊட்டி, குன்னுார்,கோத்தகிரி, குந்தா பகுதிகளில் தேயிலை, உருளை கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், பூண்டு, உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் இங்கிலீஸ் காய்கறிகளான நுால்கோல், டர்னிப் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

மூன்று பருவங்களில் சாகுபடி கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை பயிரான மலைகாய்கறி, ஆண்டிற்கு, 'நீர் போகும்; கார் போகம் மற்றும் கடை போகும்' என, மூன்று பருவங்களாக சாகுபடி செய்யப்படுகிறது. அதில், 65 ஆயிரம் ஏக்கரில் தேயிலை விவசாயம்; 25 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

தவிர, தேயிலை தோட்ட நடுவில் ஊடு பயிராக பல ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், காலநிலை மாற்றத்தின் போது பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

உருளை கிழங்கு சாகுபடி அதிகரிப்பு மாவட்டத்தில் முக்கிய விளை பொருட்களில் ஒன்றான உருளைக்கிழங்கு, மலை மாவட்டத்தின் பாரம்பரிய விளைச்சல் செய்யும் ஒரு பயிராக உள்ளது. பெரும்பாலான மலைவாழ் மக்களின் உணவில் உருளைக்கிழங்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 8,000 ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்தது. இங்குள்ள கிழங்கு தரமாக இருப்பதால், இலங்கை, மாலத்தீவு, மலேஷியா உட்பட பல வெளிநாடுகளுக்கு, 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தவிர, பல்வேறு மாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

நடப்பாண்டு கிழங்கிற்கு கிராக்கி அதிகரித்து வருவதால், சாகுபடியை, 13 ஆயிரம் ஏக்கர் சாகுபடியாக அதிகரிக்க தோட்டக்கலை துறையினர் திட்டமிட்டு அதற்காக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இங்கு, 'குப்ரி கிர்தாரி, குப்ரி ஹிமாலினி, குப்ரி சூர்யா, குப்ரிசக்யாத்ரி,' ஆகிய ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.

தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டி உருளைகிழங்கு பாரம்பரியமாக விளை பயிராக உள்ளது. சாகுபடியை, 13 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டு, அந்தந்த பகுதி தோட்டக்கலை உதவி அலுவலர்கள் வாயிலாக கிராமங்கள் தோறும் சிறு விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறோம்,' என்றனர்.

வெளிநாடு விற்பனை அளவு...

நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளை கிழங்கிற்கு நல்ல ருசி இருப்பதால் ஊட்டியில் உற்பத்தி செய்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து வெளிநாடு உட்பட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 41,000 மெட்ரிக் டன் உருளைகிழங்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, 126 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மலை மாவட்ட உற்பத்தியில், 50 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.








      Dinamalar
      Follow us