/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உருளை கிழங்கு விலையேற்றம்; மகிழ்ச்சியில் விவசாயிகள்
/
உருளை கிழங்கு விலையேற்றம்; மகிழ்ச்சியில் விவசாயிகள்
உருளை கிழங்கு விலையேற்றம்; மகிழ்ச்சியில் விவசாயிகள்
உருளை கிழங்கு விலையேற்றம்; மகிழ்ச்சியில் விவசாயிகள்
ADDED : ஜூலை 25, 2025 08:27 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளை கிழங்கு விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னுார், ஊட்டி, குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உருளைகிழங்கு விவசாயம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் விலை வீழ்ச்சி ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து விலை உயர்ந்தது.
மேட்டுப்பாளையம் ஏல மையத்தில், 45 கிலோ அடங்கிய மூட்டைக்கு அதிகபட்சமாக, கடந்த, 21ம் தேதி 3,390 ரூபாய் கிடைத்தது.
நேற்று முன்தினம் அதிக பட்சமாக, 3,300 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், உருளைக்கிழங்கு அறுவடை செய்ய விவசாயிகள் அதிகம் ஆர்வம்காட்டி வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'உருளைகிழங்கு விவசாயம் முன்பு இருந்ததை விட தற்போது விளைவிப்பது குறைந்து வருகிறது. தற்போது விலை கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.