/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழிகளாக மாறிய சாலை; தடுமாறும் வாகனங்கள்
/
குழிகளாக மாறிய சாலை; தடுமாறும் வாகனங்கள்
ADDED : நவ 06, 2024 09:24 PM

பந்தலுார் ; பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் சேதமடைந்த சாலையில், வாகனங்கள் தட்டு தடுமாறி சென்று பழுதடைந்து நிற்பது வாடிக்கையாக மாறி வருகிறது.
பந்தலுார் அருகே பிதர்காடு பஜார் பெட்ரோல் பங்க் அருகில் இருந்து, காட்ஸ்புரூக் மற்றும் மாங்கம்வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை முழுமையாக பெயர்ந்து, குழிகளாக மாறி உள்ளது.
இந்த வழியாக செல்வதற்கு வாடகை ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், குழிகளில் தட்டு, தடுமாறி செல்லும் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது.
இந்த சாலையில் இரவில் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வந்து செல்லும் நிலையில், மக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
'நெலக்கோட்டை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை, சீரமைத்து தர வேண்டும்,' என, இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், அதிகாரிகள் செவிமடுக்க மறுப்பதால் சாலையின், நிலை மோசமாக மாறி வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த சாலையில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படும் முன்பாக, சீரமைத்து தர வேண்டும்.